பஞ்சலிங்க அருவி பகுதியில் சேதம் அடைந்த இரும்பு பாலம் சீரமைப்பு


பஞ்சலிங்க அருவி பகுதியில் சேதம் அடைந்த இரும்பு பாலம் சீரமைப்பு
x

உடுமலை பஞ்சலிங்க அருவி பகுதியில் சேதம் அடைந்த இரும்பு பாலம் சீரமைக்கப்பட்டது.

திருப்பூர்

உடுமலை பஞ்சலிங்க அருவி பகுதியில் சேதம் அடைந்த இரும்பு பாலம் சீரமைக்கப்பட்டது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கிருந்து 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. மூலிகை குணம் நிறைந்த அருவி தண்ணீரில் குளித்து மகிழவும் இயற்கை அம்சங்களை பார்வையிட்டு ரசித்து அதனுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

இரும்பு பாலம் சீரமைப்பு

பஞ்சலிங்க அருவி அருகே தாழ்வான பகுதியை கடந்து அருவியில் குளித்து மகிழும் வகையில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாலத்தின் அடித்தளம் சேதமடைந்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வந்தது. அதைத் தொடர்ந்து பாலத்தை சீரமைத்து தரக்கோரி கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பாலம் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சேதம் அடைந்த பகுதி சீரமைத்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு உள்ளதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அது மட்டுமின்றி அருவிப்பகுதியில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கை உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் பணியாளர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு உள்ளது. அதன் மூலமாக பஞ்சலிங்க அருவியின் நிலை குறித்த தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேலும் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் அங்கு குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story