பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்


பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
x

பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் இயக்கத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் இயக்கத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்திற்கும், மேக்கனசைட் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் சேலம், ஈரோடு, கோவை வழியாக மற்றும் சேலம், கரூர், நாமக்கல் வழியாக செல்லும் கீழ்க்கண்ட ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) நாளை மறுநாள் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டியரெயில் 3 மணி நேரம் தாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படும். எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) நாளை மறுநாள் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

நாகர்கோவில்- மும்பை ரெயில்

கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12244) நாளை மறுநாள் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (12676) நாளை மறுநாள் கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) நாளை மறுநாள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும். ஜோலார்பேட்டை- ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (06411) நாளை மறுநாள் ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் ராஜ்கோட்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (16613) நாளை மறுநாள் 40 நிமிடம் தாமதமாக இரவு 9.30 கோவை ரெயில் நிலையம் சென்றடையும்.

மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story