நீரோடைகளின் குறுக்கே உயர் மட்டபாலங்கள் கட்டும்பணிகள் தீவிரம்


நீரோடைகளின் குறுக்கே உயர் மட்டபாலங்கள் கட்டும்பணிகள் தீவிரம்
x

நீரோடைகளின் குறுக்கே உயர் மட்டபாலங்கள் கட்டும்பணிகள் தீவிரம்

திருப்பூர்

உடுமலை, ஆக.23-

உடுமலை அருகே தரைமட்ட பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உயர் மட்டபாலங்கள்

உடுமலையில் இருந்து கொழுமம் செல்லும் சாலையில் கண்ணமநாயக்கனூர் பிரிவு உள்ளது.இங்கிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் மருள்பட்டி சாலையில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

அத்துடன் நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடங்களில் அகலமான உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.இவ்வாறு கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டிகவுண்டனூருக்கும் மருள்பட்டிக்கும் இடையில் 3இடங்களில் நீரோடைகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த பணிகளினால் வாகன போக்குவரத்து தடைபடாமலிருக்க, பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில், பக்கவாட்டில் தற்காலிகமாக மாற்றுப்பாதை வசதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்டவாகனபோக்குவரத்து வழக்கம்போல் உள்ளது.



Next Story