நுண்ணூட்டச்சத்து பயன்படுத்தும் முறை குறித்த விளக்க கூட்டம்
திமிரி வட்டார பகுதிகளில் நெல், கரும்பு பயிர்களில் நுண்ணூட்டச் சத்து பயன்படுத்தும் முறை குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
திமிரி
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார பகுதிகளில் நெல், கரும்பு பயிர்களில் நுண்ணூட்டச் சத்து பயன்படுத்தும் முறை குறித்த விளக்க கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜாநந்தம் தலைமை தாங்கினார். கரும்பு பெருக்க உதவியாளர் தன்ராஜ் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் திருமுருகன் கலந்து கொண்டு, நெல், கரும்பு மற்றும் சிறுதானிய பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களுக்கு நுண்ணுயூட்டச் சத்துக்கள் பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாக கூறினார்.
பேராசிரியர் பரமசிவம், சரவணன், எழிலன் மற்றும் சித்ரா ஆகியோர், பயிர்களின் நிலவரம், மண் பரிசோதனை செய்யும் முறை, பூச்சி நோய் நிர்வாகம் மற்றும் கரும்பு சாகுபடி முறை குறித்து விளக்கி பேசினர்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் வேலாயுதம், சர்க்கரை துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் மானியம் குறித்து பேசினார்.
முடிவில் கரும்பு அலுவலர் சுதா நன்றி கூறினார்.
கூட்டத்தில் கரும்பு உதவியாளர் தாமரைக்கனி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.