வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
x

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

10 பவுன் நகைகள் திருட்டு

கரூர் காந்திகிராமம் திண்ணப்பநகரை சேர்ந்தவர் நகுல்சாமி (வயது 66). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் தாராபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகுல்சாமி வீட்டிற்குள்சென்று பார்த்தார்.

அப்போது, வீட்டின் அலமாரியில் அவர் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி, 5 பவுன் தங்க வளையல்கள், 1 பவுன் கம்மல் உள்பட மொத்தம் 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த திருட்டு குறித்து நகுல்சாமி கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story