வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சரவணம்பட்டி
சரவணம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டு உடைப்பு
கோவை சரவணம்பட்டி விஸ்வேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாஜித் (வயது 40). இவர் கடந்த 18-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் குடியிருக்கும் தனது தந்தை சுரேந்திரனிடம் வீட்டுசாவியைகொடுத்துவிட்டு சொந்த ஊரான பாலக்காட்டுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் தனது மகனது வீட்டை பார்ப்பதற்காக சுரேந்திரன் சென்று இருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக மகன் சாஜித்திற்கு தகவல் கொடுத்தார்.
நகை, பணம் திருட்டு
இந்த தகவலின் அடிப்படையில் சாஜித் உடனடியாக கோவை வந்து வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சாஜித் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள்,அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.