வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
வாத்தலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி
வாத்தலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
வாத்தலை அருகே காவேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 45). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து இருந்தது. அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்ட 7 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story