வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு
x

தரகம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கரூர்

தரகம்பட்டி கே.கே.எம். நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவர் தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 22-ந் தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் ைவத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story