வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளை
x

புகழூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

வீட்டின் பூட்டு உடைப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 45). இவர் தற்போது கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சுந்தராம்பாள் நகர் 5-வது தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பிரகாசம் சொந்த வேலை நிமித்தமாக வீட்டை பூட்டி விட்டு கூகலூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை பிரகாசம் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

தங்க நகை-வெள்ளி கொள்ளை

இதுகுறித்து தகவல் அறிந்த பிரகாசம் தனது வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்துள்ளார். அப்போது பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.6,500 என மொத்தம் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story