வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 56). இவரது மகன் பால்ராஜ் (29). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு செல்லம்மாள் மற்றும் அவரது மகன் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் செல்லம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story