வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

பாணாவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள மங்கலம் கிராமம், ரோட்டு தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மனைவி சம்பத்து அம்மாள். இவர் நேற்று மதியம் பக்கத்து தெருவில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 1½ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. உடனே இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story