கடையின் பூட்டை உடைத்து பணம், மின்சாதன பொருட்கள் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து பணம், மின்சாதன பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
பொன்னமராவதி தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 50). இவர் இலுப்பூர் மேலப்பட்டியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு நேற்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்து 500 மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story