3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

சின்னதாராபுரம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

3 வீடுகளில் திருட்டு

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 44). இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 1 பவுன் மதிப்புள்ள 2 ஜோடி கம்மல், வெள்ளி அரணா ஆகியவை திருடிபோய் இருந்தது தெரியவந்தது.

இதேபோல் சின்னதாராபுரம் அருகே எல்.மேடு பகுதியை சேர்ந்தவர் கவுதம் (25). இவரது வீட்டில் இருந்து ஒரு ஜோடி கம்மல், லேப்டாப் திருடப்பட்டுள்ளது.இதேபோல், சின்னதாராபுரம் அருகே உள்ள காட்சினாம்பட்டி பிரிவு சாலையை சேர்ந்த கார்த்திக் (29). இவரது வீட்டில் இருந்து 1 பவுன் மதிப்புள்ள 1 ஜோடி கம்மல், 1 பவுன் சங்கிலி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இந்த 3 சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

வழக்கு

இதையடுத்து சின்னதாராபுரம் போலீசார் 3 வீடுகளுக்கும் நேரடியாக வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டன.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story