3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம், 2 பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் 40 ஆயிரம் பணத்துடன் இருந்த செல்லாத 10 ரூபாய் நோட்டு 5-ஐ வீட்டிலேயே போட்டுவிட்டு சென்றனர்.

இதையடுத்து, அருகே தனியார் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் மணி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுனும், அருகே மற்றொரு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story