3 கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பொன்னமராவதி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே ரெட்டியாப்பட்டி விளக்கு பிரிவு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஜவுளிகள், 1½ பவுன் தங்க நகையை திருடி சென்றனர். பின்னர் அருகே உள்ள மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோரில் தலா ரூ.6 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி ேதடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story