வியாபாரி வீட்டை உடைத்து நகை- பணம் திருட்டு


வியாபாரி வீட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
x

பேட்டையில் வியாபாரி வீட்டை உடைத்து நகை- பணம் திருட்டு நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே பேட்டையை அடுத்த பழையபேட்டை தெற்கு காந்திநகரில் சங்கர வடிவேலு என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சுப்பையா மகன் நாராயணன் (வயது 40) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். அலுமினிய மற்றும் சில்வர் பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான நாசரேத்திற்கு சென்றுள்ளார். நேற்று வீட்டின் உரிமையாளர் மேல்தளத்தில் உள்ள வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்வதற்காக சென்றார்.

பின்னர் கீழே வந்தபோது நாராயணன் வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நாராயணன் விரைந்து வந்து வீட்டில் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் பீரோவில் வைத்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story