குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

தடுப்புச்சுவர் கட்ட மண் தோண்டிய போது குடிநீர் உடைந்து குடிநீர் வீணாகியது.

கோயம்புத்தூர்

தடுப்புச்சுவர் கட்ட மண் தோண்டிய போது குடிநீர் உடைந்து குடிநீர் வீணாகியது.

நெடுஞ்சாலை பணி

வால்பாறையில் இருந்து கருமலை எஸ்டேட் பகுதியில் அக்கா மலை தடுப்பு அணையில் இருந்து வால்பாறை மக்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய் கள் கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை வரை நெடுஞ்சாலை துறையின் சாலையோரத்தில் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வால்பாறை முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம், சிறுபாலம் கட்டுதல், தடுப்புச்சுவர் கட்டுதல் போன்ற பணிகளை செய்யப்பட்டு வருகிறது.

வீணாகும் குடிநீர்

இதில் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவதற் காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டி எடுக்கப்பட் டது. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந் தது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் வால்பாறைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி குடிபிரிவு அதிகாரிகளுடன் சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரி செய்ய வேண்டும்

இது குறித்து வால்பாறை பகுதி மக்கள் கூறுகையில், கருமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை வரை சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறையினர் பணிகள் மேற்கொள்ளும் போது நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகே சாலையோரத்தில் தோண்டும் பணியில் ஈடுபட வேண்டும்.

அப்படி செய்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படாது. மேலும் தற்போது குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றனர்.


Next Story