குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சாத்தூர் அருேக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி, இருக்கன்குடி, பாப்பாகுடி ஆகிய பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கின்றது. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாத்தூர் இருக்கன்குடி சாலையில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோவில் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் முழுவதும் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் 4 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.