மேம்பாலத்தில் இருந்து விழுந்துஅப்பளம் போல் நொறுங்கிய லாரி


மேம்பாலத்தில் இருந்து விழுந்துஅப்பளம் போல் நொறுங்கிய லாரி
x

காவேரிப்பட்டணம் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்து அப்பளம் போல் லாரி நொறுங்கியது. டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

இரும்பு லோடு லாரி

மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இரும்பு லோடு ஏற்றி வந்தது. லாரியை ராஜஸ்தான் மாநிலம் வில்லிவாடா பகுதியைச் சேர்ந்த பாட்ஷா ஓட்டி வந்தார். அவரோடு அக்கீம் என்பவர் கிளீனராக இருந்தார்.

லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த சந்தாபுரம் மேம்பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புசுவரில் மோதி தலைக்குப்புற விழுந்தது.

நொறுங்கியது

இந்த விபத்தில் லாாி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.


Next Story