அண்ணனை தாக்கிய தம்பி கைது


அண்ணனை தாக்கிய தம்பி கைது
x

தூத்துக்குடி அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன்கள் வெள்ளத்துரை (வயது 66) என்பவருக்கும், தம்பி கோட்டாளமுத்து (58) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 22-ந் தேதி வெள்ளத்துரை முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கோட்டாளமுத்து, அண்ணணிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்குப்பதிவு செய்து கோட்டாளமுத்தை கைது செய்தார்.


Next Story