பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது
x
தினத்தந்தி 12 July 2023 5:30 AM IST (Updated: 12 July 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அரவது சகோதரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அரவது சகோதரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

பொள்ளாச்சியை சேர்ந்தவர் 51 வயது கூலி தொழிலாளி. இவரும் அவரது மனைவியும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் ஒரு மகன், 17 வயதில் ஒரு மகள் உள்ளனர். கடைசி மகள் மட்டும் பொள்ளாச்சியில் தந்தையின் பராமரிப்பில் உள்ளார். மற்ற 3 பேரும் புதுக்கோட்டையில் தாயுடன் வசித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் தந்தையுடன் வசித்து வரும் சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சகோதரன் கைது

இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் வந்ததால், அவரை புதுக்கோட்டையில் உள்ள தாய் வீட்டில் விட்டு சென்றனர்.

அப்போது சிறுமியின் சகோதரன் தனது தங்கை என்று பார்க்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரது 22 வயது சகோதரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story