பட்டதாரி வாலிபரை கொலை செய்த தம்பி கைது


பட்டதாரி வாலிபரை கொலை செய்த தம்பி கைது
x

போதையில் தகராறு செய்த பட்டதாரி வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

போதையில் தகராறு செய்த பட்டதாரி வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

பட்டதாரி வாலிபர்

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் மெயின் ரோடு மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் செந்தில்குமார் (வயது29). என்ஜினீயரிங் பட்டதாரி.

இவர் தனது தாய் மாமன் சீனிவாசன் வீட்டில், தாய் பாப்பாத்தி, பாட்டி முத்துலட்சுமி, தம்பி முத்துகுமார் ஆகியோருடன் வசித்து வந்தார். கஞ்சா போதைக்கு அடிமையான செந்தில்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

கத்தியால் குத்தி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்மாமன் சீனிவாசன், தாய் பாப்பாத்தி, சித்தி ராணி மற்றும் தம்பி முத்துகுமார் (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இதில் சம்பவத்தன்று போதையில் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் பணம் கேட்டு தகராறு செய்து உள்ளார். இதை கண்டித்ததால் செந்தில்குமார் மற்றும் முத்துகுமார் இடையே மோதல் ஏற்பட் டது.

தம்பி கைது

இதில் ஆத்திரமடைந்த முத்துகுமார் கத்தியால் செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story