ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது


ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக வினியோகிப்பதற்காக வழங்கப்படும் அரிசி, வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி மற்றும் அலுவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நல்லத்துக்குடி ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்கள் அங்கு சென்றனர். அப்போது, ரேஷன் கடைக்கு அருகில் 2 நபர்கள் 2 மொபட்டுகளில் 5 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி சென்றதை கண்ட தனி தாசில்தார் மற்றும் அலுவலர்கள் உடனே அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன்கள் அபினேஷ் (வயது 23), பரணிதரன் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அரிசி மூட்டைகளை அங்குள்ள ரேஷன் கடையில் இருந்து வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட்டுகளை பறிமுதல் செய்த தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி மற்றும் அலுவலர்கள் அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கடையில் அரிசி இருப்பை கணக்கெடுத்து, ஊழியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story