குண்டர் சட்டத்தில் அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு
x

குண்டர் சட்டத்தில் அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையஞ்செட்டிகுளம் அருகே கடந்த 10.3.2022 அன்று வைகுண்டம் என்பவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதானவர்களில் கடந்த 6.4.2022-ம் அன்று பிலீப் என்ற அருள் பிலீப்ராஜ், அண்டோ என்ற அண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர், ராஜன், ஜாக்குலின் மற்றும் லீலா என்ற செல்வலீலா ஆகிய 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் வழக்கில் கைதான பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன்களான செல்வராஜ் (40), அந்தோணிராஜ் பிரபாகரன் (37) ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.


Next Story