பள்ளிக்கூட காதல்...! குழந்தையை விட்டு விட்டு காதலனுடன் ஓட்டம் காத்திருந்து காதலனை தீர்த்துகட்டிய சகோதரர்கள்


பள்ளிக்கூட காதல்...! குழந்தையை விட்டு விட்டு காதலனுடன் ஓட்டம் காத்திருந்து காதலனை தீர்த்துகட்டிய சகோதரர்கள்
x

கணவரையும் குழந்தையையும் விட்டு விட்டு காதலனுடன் ஓடிய சகோதரி காத்திருந்து காதலனை தீர்த்துகட்டிய சகோதரர்கள்

திருவள்ளூர்

சென்னை

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர்.. 22 வயதாகிறது. கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 31ம் தேதி சுதாசந்தர் பைக்கில், ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதாசந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சுதாசந்தர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போது, இந்த கொலை தொடர்பாக, சுதாசந்தருடன் வந்த ராகிணி என்ற பெண்ணை பிடித்து விசாரணையை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையிலேயே, தகாத உறவால், இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறும் போது "சுதாசந்தர் ஆவடியில் வசிந்து வந்தபோது ராகிணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது என்பது தெரியவந்தது.

ராகிணிக்கு 25 வயதாகிறது. ராகினிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. கணவர் பெயர் வசந்த். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இவர்களின் கள்ள உறவு, ராகிணியின் கணவருக்கும், அவரது அண்ணன்களான உதயா, பரத் என்ற ராபினுக்கும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் 3 பேரும், ராகிணியையும், சுதாசந்தரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் கள்ள உறவு நீடித்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாத காலமாகவே கணவருடன் சண்டை போட்டு விட்டு அண்ணன் வீட்டில் ராகினி வசித்து வந்துள்ளார். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, சுதாசந்தருடனேயே போய்விட்டார். ரெட்டை ஏரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ராகினி அவருடன் வசித்து வந்துள்ளார்.

இதுதான், வசந்த்துக்கும், சகோதரர்களுக்கும் சுதாசந்தர் மீதான ஆத்திரத்தை உண்டுபண்ணி உள்ளது. கொலை செய்ய வேண்டும் என்று அப்போதுதான் முடிவெடுத்தனர்.சம்பவத்தன்று, ராகிணியுடன் வந்த சுதாசந்தரை, அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதும் உறுதியானது.

இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.. மேலும், கொலையாளிகள் வந்த ஆட்டோ நம்பரை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், அந்த ஆட்டோ டிரைவர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.

அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.என்றனர்.

ஆவடியில் வசித்து வந்த சுதாசந்தர், லட்சுமி புரத்திற்கு வந்து 2 மாதம் தான் ஆகிறதாம். அதற்குள் அந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது என்பது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்திருக்கிறது.அதற்கு பிறகுதான், இதுகுறித்து அவர்களுக்கு விஷயமே தெரிந்துள்ளது.

சுதா சந்தரும், ராகிணியும் ஸ்கூல் படிக்கும்போதே காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களது காதல் விவகாரம் ராகிணி வீட்டுக்கு தெரிந்து, கொந்தளித்துள்ளனர். அதனால்தான், அவசர அவசரமாக வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார் ராகினி.

இந்த விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் கொந்தளிக்கவும்தான், தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவிட்டு, சுதா சந்தருடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு துணிந்தது விசாரணையில் தெரியவந்தது.

கொலையில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் கார்த்திக் 30, ராகிணியின் அண்ணன்கள் ஆவடி வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்த பரத் (எ) ராபின் 30, உதயா 26, ஆகியோரை ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய ராகிணியின் கணவர் அம்பத்தூரை சேர்ந்த வசந்த் 28, மற்றும் அவரது அப்பா வாசுதேவன் 59, ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்களும் தற்போது கைதாகி புழலில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story