கோவில்பட்டியில்பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். மற்றும் தொலை தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story