பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி, 5 ஜி ேசவை வழங்க வேண்டும், பணப்பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 15 சதவீதம் சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். முன்னதாக கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சிவசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட உதவி செயலாளர் மனோகரன், சி.ஐ.டி.யு. போக்குவரத்து ஊழியர் சங்கத்தை சேர்ந்த சேதுராமன், உதவி கிளை தலைவர் ஜெயமணி, முன்னாள் அகில இந்திய உதவி பொருளாளர் பங்கஜவல்லி, முன்னாள் கிளை செயலாளர் சசிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story