பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர்,
பி.எஸ்.என்.எல்.நிர்வாகம் 4ஜி, 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கடந்த 2017 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பதவி உயர்வு கொள்கைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் அரசு வங்கி முன்பு இருந்து கச்சேரி ரோடு வரை இந்த மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story