பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது. 4 ஜி வழங்குவதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு போடப்பட்டு உள்ள வரைமுறை தடைகளை நீக்க வேண்டும். 4 ஜி கருவிகளை தயாரித்து வழங்க தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து உடனடியாக 4 ஜி கருவிகளை வழங்க முன் வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க கிளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில உதவி பொருளாளர் நிஷார் அகமது கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட உதவி செயலாளர் மனோகரன், கிளை செயலாளர்கள் சப்தகிரி, பாலாஜி, பாலாஜி, மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் பிரபாகரன், ஒப்பந்த ஊழியர் சங்க கிளை செயலாளர் ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.