பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2023 1:15 AM IST (Updated: 7 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கோரிக்கை அட்டை அணிந்து பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். ஓய்வூதியர் சங்கங்களின் இணைப்புக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓய்வூதியர் சங்க கிளை துணை தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

இதில் மாநில துணை செயலாளர் ஜான்போர்ஜியா, கிளை செயலாளர் ஜோதிநாதன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில துணை தலைவர் அய்யனார்சாமி, கிளை நிர்வாகிகள் வைத்திலிங்கபூபதி, கிறிஸ்டோபர் மற்றும் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த 1.1.2017 முதல் 15 சதவீத ஓய்வூதிய மாற்றத்தை வழங்க வேண்டும். மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதிய மாற்றத்தை சம்பள மாற்றத்துடன் இணைப்பதற்கு காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து இருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story