பி.எஸ்.என்.எல். சார்பில் நடந்த ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு; பொது மேலாளர் வழங்கினார்

பி.எஸ்.என்.எல். சார்பில் நடந்த ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு; பொது மேலாளர் வழங்கினார்
x

பி.எஸ்.என்.எல். சார்பில் நடந்த ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு; பொது மேலாளர் வழங்கினார்

ஈரோடு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 24-ம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ஈரோடு பி.எஸ்.என்.எல். சார்பில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பொது மேலாளர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவுக்கு பி.எஸ்.என்.என். ஈரோடு பொது மேலாளர் ச.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஆஸ்ரம் பள்ளிக்கூட மாணவி அ.அப்ரீன்பானு முதல் பரிசு பெற்றார். மாணவர் பி.வீரேந்தர்சிங் 2-ம் பரிசும், மாணவி க.ஜோஸ்னா 3-ம் பரிசும் வென்றனர். இவர்களுக்கு பொது மேலாளர் கிருஷ்ணகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story