சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்


சேலத்தில்  பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 3-வது ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஓய்வூதிய பலன்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

இதற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாலகுமார் தலைமை தாங்கினார். இதில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகள் பேசியதுடன் கோஷங்களும் எழுப்பினர். தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சீரங்கபாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். சேலம் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சேகர், கோபால், சீனிவாசன், செல்வம், தமிழ்மணி உள்பட பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story