பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்

திருச்சி

திருச்சி, ஜூன்.22-

பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சக்கிவேல் வரவேற்றார். போராட்டத்தில் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை கால தாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் சுந்தரராஜ் நன்றி கூறினார்.


Next Story