பா.ஜனதா சார்பில் பட்ஜெட் விளக்க கருத்தரங்கம்
வள்ளியூரில் பா.ஜனதா சார்பில் பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூரில் பாரதீய ஜனதா கட்சியின் தொழிற்பிரிவு சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் நடந்தது. நெல்லை தெற்கு மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, தொழிற்பிரிவு மாநில தலைவர் அசோக் சுந்தரேசன், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி ஆகியோர் பட்ஜெட் விளக்க உரையாற்றினார்கள். முடிவில், மாவட்ட துணை தலைவர் மகேஷ் நன்றி கூறினார். இதில் மாவட்ட செயலாளர் பசுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் சட்டநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த 9 ஆண்டுகளாக வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட நிதிநிலை அறிக்கையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து சமர்பித்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கான கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொள்ளும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதன் மூலம் நாடு வளர்ச்சி அடையும். கடந்தாண்டு பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் 33 சதவீதம் வளர்ச்சி பணிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.