புதர்மண்டி கிடக்கும் இரட்டை வாய்க்கால்


புதர்மண்டி கிடக்கும் இரட்டை வாய்க்கால்
x

புதர்மண்டி கிடக்கும் இரட்டை வாய்க்கால் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் ரத்தினம் சாலையில் ஏராளமான வீடுகள், கடைகள், தியேட்டர் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த ரத்தினம் சாலை வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. இந்த இரட்டை வாய்க்கால் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி செல்கிறது. இந்நிலையில் இந்த இரட்டை வாய்க்காலில் செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது.

மேலும் வாய்க்கால் கழிவு நீரில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அடைத்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story