புதூர் காந்திபுரம் குங்கும காளியம்மன் கோவில் ஆடி திருவிழா


புதூர் காந்திபுரம் குங்கும காளியம்மன் கோவில் ஆடி திருவிழா
x

புதூர் காந்திபுரம் குங்கும காளியம்மன் கோவில் ஆடி திருவிழா நடந்தது.

மதுரை

மதுரை புதூர் காந்திபுரம் விரிவாக்கம் பகுதியில் உள்ள குங்கும காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைெபற்று வருகிறது. ஆடிப்பெருக்கையொட்டி இன்று காலை 9 மணிக்கு மேல் குங்கும காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபடுகின்றனர். 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி காலையிலும், மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு வருதலும், பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதலும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்கள் அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story