மாநகராட்சி சிறுவர் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம்
மாநகராட்சி சிறுவர் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதை மேயர், ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர்
கோவை
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் சிவராம் நகரில் குடி யிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி சிறுவர் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அரங்கம் கட்டப்பட்டு உள்ளதாக தெரி கிறது.
இதை அறிந்த மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து அரங்கம் கட்டியிருப்பது உறுதியானது. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா மற்றும் ஆணையாளர் பிரதாப் ஆகியோர் அறிவுறுத்தினர்.
அப்போது மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையாளர் (பொறுப்பு) மகேஷ்கனகராஜ், உதவி செயற் பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story