கட்டிட விதிமீறல்கள், டிரோன் மூலம் கண்காணிப்பு


கட்டிட விதிமீறல்கள், டிரோன் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 1:00 AM IST (Updated: 19 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கட்டிட விதிமீறல்கள் குறித்து டிரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.

கோயம்புத்தூர்

டவுன்ஹால்


கோவையில் கட்டிட விதிமீறல்கள் குறித்து டிரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.

அதிகாரிகள் ஆய்வு

கோவை மாநகராட்சியில் புதிய வீடு, கடை போன்ற எந்த கட்டி டம் கட்டுவதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்துக் கான ஆவணங்கள், கட்டிட வரைபடம் உள்பட பல்வேறு ஆவணங்க ளை கோவை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவற்றை அதிகாரிகள் பரிசீலித்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அளிப்பார்கள்.

இந்தநிலையில் கோவை மாநகராட்சியில் வரைபட அனுமதியை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது கண்காணிப்பில் தெரியவந்தது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

விதிமீறல் கட்டிடங்கள்

கோவை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? என்று முதல்கட்டமாக கிராஸ்கட் ரோடு பகுதியில் தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதில் பல்வேறு கட்டிடங்கள் விதிகளை மீறி கூடுதல் அளவிலும், வீட்டுக்கான உரிமத்தை பெற்று சில கட்டிடங்கள் வணிக ரீதியாக செயல்பட்டதும் தெரியவந்தது. எனவே அந்த கட்டிடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய வரியை செலுத்தி அதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

டிரோன் மூலம் கண்காணிப்பு

இதுபோன்று மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் கண்காணிக்கப்பட உள்ளன. அதில் குறிப்பாக உயரமான கட்டி டங்கள் அனுமதி பெற்ற அளவுகளில் கட்டப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறியவும், கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த டிரோன் மூலம் கட்டிடங்களின் அளவு, வரைபடம் உள்ளிட்டவற்றை கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story