கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநாடு


கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநாடு
x

பாளையங்கோட்டையில் கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது.

திருநெல்வேலி

தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்க நெல்லை மாவட்ட மாநாடு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை எஸ்.மகாலிங்கம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

நெல்லை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் வேலு என்ற முருகன், துணைத்தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பேச்சியப்பன் வரவேற்றார்.

மாநாட்டில், கட்டுமான பொருட்களான செங்கல், எம்-சாண்ட் மணல், சிமெண்டு, கம்பி ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, கட்டுமான தொழில் பாதிப்பு இன்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ, தையல், சமையல், சலவை தொழிலாளர்களுக்கு அவர்கள் சார்ந்த தொழில் கருவிகள் வாங்குவதற்கு மானிய அடிப்படையில் கடன் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதில் மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், வைரமணி, ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சொர்ணம் நன்றி கூறினார்.


Next Story