பழையனூரில் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது
பழையனூரில் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது
திருவாரூர்
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பழையனூரில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. ஆனால், கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருந்தது. இதனால், மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் கட்டப்பட்ட இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து காட்சியளித்தது. கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டதால், கட்டப்பட்ட கட்டிடம் பழுதடையும் வாய்ப்பு தென்பட்டது. இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சுய உதவிக்குழு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுய உதவிக்குழுகட்டிடத்தை கட்டி முடித்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story