புகழூர் நகர தி.மு.க. சார்பில் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


புகழூர் நகர தி.மு.க. சார்பில் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

புகழூர் நகர தி.மு.க. சார்பில் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் நகர தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் புகழூர் 4 ரோடு பகுதியில் நடைபெற்றது. புகழூர் நகரக் கழக அவைத் தலைவர் வாங்கிலி வரவேற்று பேசினார். நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், மாவட்ட தொ.மு.ச. தலைவர் அண்ணாவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியவர்கள் அதிகாரம் செலுத்துவதற்கும், தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும், மக்களை பயமுறுத்தியும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2 ஆண்டுகள் மக்களின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு மக்களின் பிரதிநிதியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 2 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் முதல்-அமைச்சர் அயராது பொது மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி, நகரக் கழக துணைச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story