புகழூர் நகர தி.மு.க. ஆலோசனை கூட்டம்


புகழூர் நகர தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

புகழூர் நகர தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் நகர தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு புகழூர் நகர கழக அவைத்தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார். புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டிப்பது, இந்த கைதை கண்டித்து கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் புகழூர் நகர பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story