புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம்


புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம்
x

புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் நகராட்சி கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் பால்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அதற்கு பதில் அளித்து நகராட்சி தலைவர் பேசுகையில், பாண்டிபாளையத்தில் திறந்த வெளியில் உள்ள கிணற்றுக்கு தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. நகராட்சியில் சுகாதாரத்தை பேணும் வகையில் 3 பொதுக்கழிவறையும், கூலகவுண்டனூர், காந்திநகர் உள்பட 3 இடங்களில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. நகராட்சி முழுவதும் சாக்கடை, குடிநீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும். மேலும் கவுன்சிலர்கள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை கண்காணித்து அதில் உள்ள குறைகளை களைய வேண்டும், என்றார்.தொடர்ந்து கூட்டத்தில், கிருமிநாசினி, தெருவிளக்கு பராமரிப்பு பணிக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, என்பன உள்பட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story