புகாரி ஷரீப் விழா:காயல்பட்டினம் நகராட்சி பகுதிபள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை


புகாரி ஷரீப் விழா:காயல்பட்டினம் நகராட்சி பகுதிபள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகாரி ஷரீப் விழாவை முன்னிட்டு காயல்பட்டினம் நகராட்சி பகுதி பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்ககப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த மஜ்லிஸ் புகாரி ஷரீப் சபையின் 96-ஆம் ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. அதனை ஒட்டி உலக மக்கள் அமைதி மற்றும் மக்கள் நலனுக்காக சிறப்பு அபூர்வ துஆ வும் நாளை(புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் புகாரி ஷரீபு சபையில் நடைபெறுகிறது.

இந்த பிரார்த்தனையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் இலங்கை உள்ளிட்டபல்வேறு நாடுகள், நகரங்களில் இருந்து பல ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) காயப்பட்டிணம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால தண்டாயுதபாணி அறிவித்துள்ளார்.


Next Story