ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

திருப்பூர்

முத்தூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

பழையகோட்டை

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் விற்பனைக்காக பல்வேறு ரக மாடுகளை கொண்டு வந்தனர்.

சந்தையில் மொத்தம் 54 மாடுகள் கொண்டு வரப்பட்டது. இதில் 31 மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை

மேலும் கடந்த இரண்டு வருட காலமாகவே பழையகோட்டை மாட்டுத்தாவணி சந்தையில் ரேக்ளா, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் பால் உற்பத்திக்காகவும், விவசாயிகள் வளர்க்கும் ஆர்வம் காரணமாகவும் வழக்கத்தை விட பசுமாடுகள், இளங்கன்றுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் நடைபெற்ற காங்கயம் இன பசுமாடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story