காளை விடும் விழா


காளை விடும் விழா
x

மேட்டு இடையம்பட்டியில் காளை விடும் விழா நடைபெற்றது.

வேலூர்

அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் 62-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது. வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர். காளைகளுக்கு, காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் நாட்டாமை ராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், மேட்டுக்குடி சேட்டு, கோவில் நிர்வாகி ஜெயசீலன், ஞானசேகரன், பூங்காவனம், துளசி மற்றும் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சங்கர் வரவேற்றார்.

வேலூர் உதவி கலெக்டர் கவிதா, டெல்லியில் இருந்து வந்த பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் ஆகியோர் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

விழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இலக்கை நோக்கி அதிவேகமாக சீறிபாய்ந்து ஓடி முதலிடம் பிடித்த காளைகள் உள்பட மொத்தம் 78 பரிசுகள் வழங்கபட்டது. விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story