மூங்கில் குத்துமுனியப்பன் கோவில் திருவிழாவில் எருதாட்டம்


மூங்கில் குத்துமுனியப்பன் கோவில் திருவிழாவில் எருதாட்டம்
x

நெய்க்காரப்பட்டியில் மூங்கில் குத்துமுனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

சேலம்

கொண்டலாம்பட்டி:-

நெய்க்காரப்பட்டியில் மூங்கில் குத்துமுனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

எருதாட்டம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டியில் மூங்கில் குத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமை அன்று திருவிழாவையொட்டி எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நெய்க்காரப்பட்டியில் மூங்கில் குத்து முனியப்பன் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து எருதுகள் கொண்டுவரப்பட்டன. இவைகள் 19 கோர்வைகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு கோர்வைக்கும் தலா 5 மாடுகள் என்ற எண்ணிக்கையில் அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்கள் காயம்

நெய்க்காரப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் மதியம் 1 மணி அளவில் எருதாட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்ற வீரர்கள் எருதுகளை வடத்தில் கட்டி அதன் முன்பு பொம்மைகளை கொண்டு தங்களது வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் விளையாடினார்கள். அப்போது மாடுகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக கால்நடை டாக்டர்கள் எருதுகளை பரிசோதித்த பின்னரே எருதாட்டத்துக்கு மாடுகளை அனுமதித்தனர். எருதாட்டத்தை ெநய்காரப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

பாதுகாப்பு

இதையொட்டி அங்கு கொண்டலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எருதாட்டம் முடிந்த பிறகு மூங்கில் குத்து முனியப்பனை பக்தர்கள் வணங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்்த்தா அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story