பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது


பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது
x

பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி அனுமதியின்றி எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் எருதாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் அதனை மீறி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது.

இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த எருது கயிறு பிடிக்காமல் கழற்றி விடப்பட்டதால் சுற்றி நின்ற பொதுமக்களை கொம்பில் குத்தி தூக்கி வீசியது. இதில் கொண்ட சாமனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 55), முனியப்பன் (42), தீத்தாரஅள்ளியை சேர்ந்த திவ்யா (19) ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் பாலக்கோடு கமால் சாகிப் தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன், மந்திரி கவுண்டர் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், பனாரஸ் தெருவை சேர்ந்த தன்சிம் (22), கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த ராணி (47), அண்ணா நகரை சேர்ந்த சண்முகம் (28) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுதிமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (25), அன்பரசு (47), முருகன் (45), ஆறுமுகம் (46), சபரி (29), வெள்ளையன் (45) உள்பட 26 பேரை கைது செய்தனர்.


Next Story