கோவில் விழாவையொட்டி எருதாட்டம்


கோவில் விழாவையொட்டி எருதாட்டம்
x

சங்ககிரியில் கோவில் விழாவையொட்டி எருதாட்டம் நடந்தது.

சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி வைகுந்தம் சந்தைப்பேட்டை ஏரிக்கரை மீது உள்ள செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மதியம் எருதாட்டம் நடந்தது. இதற்காக 60-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடக்கினர். இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். எருதாட்டத்தையொட்டி சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் சங்கரன், மணிகண்டன், திருவிழா கமிட்டி தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story