திருப்பத்தூர், சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்


திருப்பத்தூர், சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர், சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை

திருப்பத்தூர், சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

திருப்பத்தூர் அருகே ஆவணிப்பட்டி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் ஆவணிபட்டி-ராங்கியம் சாலையில் நடைபெற்றது. மொத்தம் 26 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பரளி செல்வி மற்றும் அடுகபட்டி மகாபாலா வண்டியும், 2-வது பரிசை குப்பச்சிபட்டி வைரம், பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 3-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பரிவில் முதல் பரிசை துலையானூர் பாஸ்கரன்மகேஸ்வரி வண்டியும், 2-வது பரிசை துலையானூர் ராமன்ராமசாமி, பில்லமங்கலம் வாசுதேவன் வண்டியும், 3-வது பரிசை துவரங்குளம் கரும்புசெல்வம் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை ஏனாதி பூங்குளத்தான் வண்டியும், 2-வது பரிசை அழகாபுரி சக்கரைராவுத்தர் வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றது.

பரிசுகள்

இதேபோல் காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டி செங்குளிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கண்டுப்பட்டி-பாகனேரி சாலையில் நடந்தது. மொத்தம் 23 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி, சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை செம்பனூர் கங்கானிபாலமுருகன், பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி வண்டியும், 2-வது பரிசை பரவை சீலைக்காரியம்மன் மற்றும் பத்மநாதமங்கலம் குமார் வண்டியும், 3-வது பரிசை பரவை சோனைமுத்து மற்றும் நாட்டரசன்கோட்டை பழனி வண்டியும் பெற்றது.

இறுதியில் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தல்லாம்பட்டி சூரியா வண்டியும், 2-வது பரிசை சாமியார்பட்டி மருது மற்றும் தனியாமங்கலம் போஸ் வண்டியும், 3-வது பரிசை பன்னபுரம் துளசிநாகராஜ் மற்றும் கண்டிப்பட்டி பாண்டி பிரதர்ஸ் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story